[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி 92% சரிவு

imports-from-pakistan-plunged-92-in-march-after-imposition-of-200-customs-duties

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 92 சதவிகிதம் குறைந்துள்ளது. 

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா  தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா கடுமையாக்கியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் சுங்க வரியை இந்தியா விதித்தது. அதைத் தொடர்ந்து சென்ற மார்ச் மாதத்தில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்தது 92 சதவிகிதம் குறைந்து சுமார் 19 கோடி ரூபாயாக சரிவடைந்தது. 

இதுவே முந்தைய‌ நிதியாண்டின் இதே மார்ச் மாதத்தில் பாகிஸ்தானிலிருந்து சுமார் 240 கோடி ரூபாயாக இருந்ததாக புள்ளி விவரங்கள்‌ தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close