[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
வணிகம் 31 Oct, 2017 04:50 PM

விரைவில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன்..........2 நாள் பேட்டரி தாங்கும்

nokia-2-budget-smartphone-with-2-day-battery-life-launched-in-india-releasing-mid-november

48 மணி நேரம் தாங்கும் பேட்டரியுடன் கூடிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 2 ஸ்மார்போன் நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.  

பின்லாந்து நாட்டைச் சார்ந்த நோக்கியா நிறுவனத்தின் போன்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. நோக்கியா நிறுவனம் மிக குறைந்த விலையில் மொபைல்களை அறிமுகம் செய்து சாதாரண மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக நோக்கியாவின் 1100 மாடலில் பேட்டரி நெடுநேரத்திற்கு சக்தி குறையாமல் இருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பின்னர் பல்வேறு மொபைல் போன்கள் போட்டிக்கு வந்ததால் நோக்கியா மொபைல்கள் அதிக அளவு விற்பனையில் இல்லாமல் இருந்தது. தற்போது, எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா உடன் இணைந்து ஸ்மாட் போன்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச அளவில் 99 யூரோவிற்கு விற்பனை செய்யப்படுவதால் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7500 என நிர்ணம் செய்யப்படும் என்று தெரிகிறது. IP 52 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

நோக்கியா 2 சிறப்பம்சங்கள்:

 • 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி LTPS LCD டிஸ்ப்ளே 
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
 • 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்
 • அட்ரினோ 304 GPU
 • 1 ஜிபி ரேம்
 • 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
 • 5 எம்பி செல்ஃபி கேமரா
 • வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
 • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • 4100 எம்ஏஎச் பேட்டரி
Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close