[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
வணிகம் 17 Jun, 2017 05:27 PM

ஜிஎஸ்டி வரியால் மின்விசிறி விலை கடுமையாக உயரும்

gst-will-hike-fan-price-hike-and-unemployment

ஜிஎஸ்டியின் 28% வரியால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மின்விசிறியின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மின் விசிறிகளுக்கு 12 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டியில் அது 28 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் மின் விசிறிக்கு ஏர் கண்டிஷனர் அளவுக்கு வரி விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது என உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதே போல் ஜிஎஸ்டி வரி முறையால் தமிழகத்தில் 8 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இது குறித்து பேசிய இச்சம்மேளனத்தின் தலைவர் மதிவாணன், ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். இதனால் நாட்டில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் எனவே அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக இருக்கும் நிலையில் ஜிஎ‌ஸ்டி கவுன்சிலின் கூட்டம் நாளை‌ டெல்லியில் நடைபெறவுள்ளது. 

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான 17ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட‌‌த்தில், மேலும் பல பொருட்களுக்கான வரி நிர்ணயிக்கப்பட இருக்கிறது. கடந்த 1‌1ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தி‌ல் எடுக்கப்பட்ட முடிவுகளு‌க்கு இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close