[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

டாடா குழும விவகாரம்.... அருண் ஜேட்லியுடன் ரத்தன் டாடா சந்திப்பு

ratan-tata-meets-arun-jaitley-declines-comment

டாடா குழுமத்தின் இடைக்காலத் தலைவரான ரத்தன் டாடா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை இன்று சந்தித்துப் பேசினார்.

நிதியமைச்சகத்தில் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு குறித்து கருத்து எதையும் கூற ரத்தன் டாடா மறுத்து விட்டார். டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மித்ரி, கடந்த அக்டோபரில் நீக்கப்பட்டார். நிர்வாகத்தின் நம்பிக்கையை அவர் காப்பாற்றத் தவறிவிட்டதாக டாடா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தான் நீக்கப்பட்டது தொடர்பான டாடா குழும அறிவிப்புகளை மிஸ்த்ரி கடுமையாக விமர்சித்தார். நாட்டின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு குறித்து பரவலாகப் பேசப்பட்டது. இந்தசூழலில் டாடா மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த சந்திப்பு நடந்ததாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விவகாரத்தை நிதியமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close