[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

புதிய 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள்

new-500-rupee-note-features

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகளின் மாதிரி வடிவம் மற்றும் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

500 ரூபாய் நோட்டின் முன்பகுதியில், கரன்சியின் மதிப்பு 500 நீர் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கருகில், ரூபாய் நோட்டின் இலக்கு மதிப்பு மறைந்திரு‌ப்பதை பார்க்க முடியும். தேவநாகரி எழுத்துக்களால் பணத்தின் மதிப்பு பொறிக்கப்பட்டிருக்கும். மகாத்மா காந்தியின் உருவத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டில் இருக்கும் பாதுகாப்பு இழை நீல நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ரூபாய் நோட்டின் வலது புறத்தில் கவர்னரின் கையெழுத்தும் ஆர்பிஐயை சின்னமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் முறையில் நீர் குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. இடமிருந்து வலமாக, சிறிய அளவு முதல் பெரியதாக வரிசை எண் பொறிக்கப்பட்‌டுள்ளது. ரூபாய் நோட்டின் வலது புறத்தில் வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் முன்பு பச்சை நிறம் தெரிந்தது, தற்போது நீல நிறமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வலது புறத்தில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். வலது பக்க ஓரத்தில் ரூ.500 என்று பொறிக்கப்பட்டிருக்கும். இடது, வலது பக்க ஓரங்களில் 5 கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 50‌0 ரூபாய் நோட்டின் பின்புற பகுதியில், ரூபாய் அச்சிடப்பட்ட ஆண்டு‌ அதாவது 2016 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்ததாக, சுவச் பாரத் சின்னம் மற்றும் சுலோகன் அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் நேராக இந்திய மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தில் இந்திய தேசியக் கொடியுடன் கூடிய டெல்லி செங்கோட்டை அச்சிடப்பட்டுள்ளது. வலது ஓரத்தில் தேவநாகரி எழுத்துக்க‌ளில் ரூபாயின்‌ மதிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close