[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

ரியல் எஸ்டேட் சட்டம் இன்று முதல் அமல்? விதிகளை மீறும் பில்டர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை

real-estate-regulation-and-development-act-2016

ரியல் எஸ்டேட் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவிக்கும் எனத் தெரிகிறது.

முதல்கட்டமாக, யூனியன் பிரதேசங்களான சண்டிகர், அந்தமான், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, லட்சத் தீவுகள் ஆகியவற்றில் அமல்படுத்தப்பட உள்ளதாக டெல்லியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சட்டத்தின்படி, கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்த காலத்தைத் தாண்டி வீட்டை ஒப்படைக்க கால தாமதம் செய்யும் காலத்துக்கு 12 சதவிகித வட்டியை வாடிக்கையாளருக்கு தர நேரிடும்.

வீடு வாங்க வாடிக்கையாளர் அளிக்கும் தொகையில் 70 சதவிகிதத்தை தனி வங்கிக் கணக்கில் பராமரிப்பதும் கட்டாயமாகிறது. இதன்மூலம், ஒருவரிடம் பணம் பெற்று வேறு கட்டுமான திட்டத்தில் அதை செலவிடுவது தவிர்க்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் கட்டுமான உரிமையாளர்கள், முகவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் ரியல் எஸ்டேட் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்த புதிய ஆணையத்தை ஏற்படுத்தவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தும் இந்த சட்டம் கடந்த மார்ச் 10ம் தேதி மாநிலங்களவையிலும் 15ம் தேதி ‌மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் கட்டுமானத் துறையில் முக்கிய சீர்திருத்தமாக கருதப்படும் இந்தச் சட்டத்தால், வீடு, மனை வாங்கும் வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close