[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

மத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு

police-registered-a-case-against-bjp-state-president-p-s-sreedharan-pillai

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக கேரள மாநில பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை. இவர், பாஜகவுக்கு ஆதரவு கேட்டு அட்டிங்கல் என்ற பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, ’’பாலகோட் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் மதம், இனம் பற்றி சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆடையை களைந்தால் எந்த இனம் என்பது தெரிந்துவிடும்’’ என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்தப் பேச்சை கடுமையாகக் கண்டித்தன. மதரீதியாக அவர் பேசியது, தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக பேசியதற்கு ஸ்ரீதரன் பிள்ளை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கேரள மாநில தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா, அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்தார். இதை யடுத்து ஸ்ரீதரன் பிள்ளை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close