[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

polling-begins-tamilnadu

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் காலையிலேயே வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா நடைபெறும் மதுரை மக்களவைத் தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இத்தேர்தலில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு எந்திரங்கள், 89 ஆயிரத்து 160 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 94 ஆயிரத்து 653 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரத்து 400 துணை ராணுவப்படையினர், 63 ஆயிரத்து 951 காவல்துறையினர், 27 ஆயிரத்து 400 ரிசர்வ் காவல் படையினர், 13 ஆயிரத்து 882 ஊர்க்காவல் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஈடுபடுத்தப்ப‌ட்டுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close