[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு

polling-begins-at-7-am-in-tamilnadu

தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை செவ்வாய் மாலையோடு முடிவடைந்த நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவினை வெப்கேம் மூலம் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தேர்தலில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு எந்திரங்கள், 89 ஆயிரத்து 160 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 94 ஆயிரத்து 653 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று கட்டப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா நடைபெறும் மதுரை மக்களவைத் தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரத்து 400 துணை ராணுவப்படையினர், 63 ஆயிரத்து 951 காவல்துறையினர், 27 ஆயிரத்து 400 ரிசர்வ் காவல் படையினர், 13 ஆயிரத்து 882 ஊர்க்காவல் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஈடுபடுத்தப்ப‌ட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close