[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

சாதி, மதத்தை வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ec-tells-sc-it-only-had-power-to-issue-advisory-to-those-violating-model-code-of-conduct-and-making-hate-speeches

சாதி, மதத்தை கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள், சாதி, மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக தொடர்ச்சியான புகார்கள் இருந்து வருகின்றன. இதனைத் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில் பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவோ அல்லது நோட்டீஸ் அனுப்பவோ மட்டுமே அதிகாரம் இருப்பதாக தெரிவித்தது. விதிகளை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சாதி, மதத்தை கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இப்படிப்பட்ட வேட்பாளர்களை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், அதிகாரத்திற்கு உட்பட்டு எத்தகைய கடும் நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close