[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

நாளை மறுதினம் முதல்கட்ட வாக்குப்பதிவு 

the-election-campaign-ends-with-5-pm-today-in-the-20-states-of-91-constituencies

மக்களவைத் தேர்தலில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. 

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் ஆந்திரம், அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்குவங்கம், அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

Image result for முதல்கட்ட வாக்குப்பதிவு

இந்தத் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. முதல்கட்ட தேர்தலின் போது ஆந்திரம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் ஒடிசாவில் மட்டும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் எழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close