[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

எல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

lic-assistants-job-notifications-out

எல்.ஐ.சி எனப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தில், உதவியாளர் (அசிஸ்டெண்ட்) என்ற பணிக்கு 7,942 காலியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
உதவியாளர் (அசிஸ்டெண்ட்)

மொத்த காலியிடங்கள் = 7,942

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.10.2019

தேர்வு நடைபெறும் தேதிகள்: 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 21.10.2019 மற்றும் 22.10.2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு: (01.09.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.14,435 முதல் அதிகபட்சமாக ரூ.40,080 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.85 + ஜிஎஸ்டி
2. மற்ற பிரிவினர் - ரூ.510 + ஜிஎஸ்டி

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பயின்று குறைந்தபட்சம் 10 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மை தேர்வு

குறிப்பு:
தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமையும்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Assistants-2019 - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close