[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா!

temporary-engagement-of-dispensers-under-nrhm-scheme-notifications-out

தமிழக அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் என்ற பணிக்கு தற்காலிக ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser)

மொத்த காலியிடங்கள் = 405

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 31.08.2019
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 31.8.2019
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019, மாலை 5.00 மணி வரை

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக, 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 57 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் அவசியம்.

ஊதியம்:
தினமும் 6 மணி நேரம் பணியாற்றுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.750 வீதம் (வாரத்தில் 6 நாட்கள்)
வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 
டிப்ளமா இன் பார்மஸி (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஹோமியோபதி) அல்லது தமிழக அரசால்நடத்தப்படும் டிப்ளமா இன் இண்டகிரேடட் பார்மஸி என்ற படிப்பை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், தமிழக சுகாதாரத்துறையின் http://www.tnhealth.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 20.09.2019 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துமனை வளாகம்,
அரும்பாக்கம்,
சென்னை - 600 016.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.tnhealth.org/notifications.php (அல்லது) http://www.tnhealth.org/online_notification/notification/N1908211 6.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close