[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

அரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்

24-lakh-people-waiting-for-jobs-list-released-those-registered-in-employment-tamilnadu-employment

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 24 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை முக்கியமான பிரச்னையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 மக்களவை தேர்தலில் அளித்த வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக அரசு மறுத்து வருகிறது. நேரடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை காட்டிலும், தொழில் முனைவோர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

                  

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி பதிவு செய்துள்ளவர்களின் தகவல்கள் இவை:

           

மொத்தம் பதிவு செய்துள்ளவர்கள் - 79 லட்சத்து 62 ஆயிரத்து 826 பேர்

வயது வாரியாக:-

18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் - 20.90 லட்சம் பேர்
18-23 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள் -  20.20 லட்சம் பேர்
24-35 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள் -  27.08 லட்சம் பேர்
36-56 வயதுடையவர்கள்                          -  11.36 லட்சம் பேர்
57 வயதுக்கு மேற்பட்டவர்கள்                    -  6,440 பேர்

மாற்றுத் திறனாளிகள்                           -  98,709 பேர்
பார்வையற்றவர்கள்                             - 15,225 பேர்
வாய் பேசாதோர்                                - 13,672 பேர்
 
பாட வாரியாக:-

கலை பட்டதாரிகள் - 4.29 லட்சம் பேர் 
அறிவியல் பட்டதாரிகள் - 5.62 லட்சம்
வணிகவியல் பட்டதாரிகள் - 2.96 லட்சம் பேர்
பொறியியல் பட்டதாரிகள்  - 24 லட்சம் 
வேளாண் பட்டதாரிகள்    - 6,216

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இது தவிர, தொழில்திறன் இல்லாதோர், தொழில்நுட்ப பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் சென்னையில் உள்ளன.

பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தொழில் படிப்புகள் மற்றும் முதுகலை கல்வித் தகுதிகளை இருப்பிட முகவரிக்கு ஏற்ப சென்னை அல்லது மதுரையில் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால்தான் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அமலில் இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close