[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெளியானது சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சென்னை மாணவருக்கு 3-வது இடம்

cbse-announces-class-12-board-exam-results

சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 83 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டு மொத்தம் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில், டெல்லியைச் சேர்ந்த மாணவி சுக்ரிதி குப்தா 500-க்கு 497 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த மாணவி பாலக் கோயல், 496 மதிப்பெண்களை பெற்று 2-ஆம் இடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் 3-ஆவது இடத்தை சென்னையைச் சேர்ந்த மாணவர் அஜிஷ் சேகரும் ஹரியானாவைச் சேர்ந்த சேர்ந்த மாணவி சோம்யா உப்பலும் பெற்றுள்ளனர்.

கே.கே.நகர் பி.எஸ்.பி.பி பள்ளியைச் சேர்ந்த மாணவர் அஜிஷ் சேகர், 500-க்கு 495 மதிப்பெண்களைப் பெற்று சென்னை‌ மண்டலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 88.58 சதவீதமும், மாணவர்கள் 78.85 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

97.61 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close