[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

சத்தீஸ்கரில் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் அடக்கம்

rangaragavan-bsf-jawan-from-tamil-nadu-dies-in-naxal-attack-at-chattisgarh

சத்தீஸ்கரில் கண்ணிவெடி தாக்குதலில் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப்படை வீரர் ரங்கராகவன் உயிரிழந்தார். மேலும், 4 வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நக்சல் அச்சுறுத்தல் ‌அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், Murliguda - Banda இடையே வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் மீது ‌நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர் தாக்குதல் நடத்தாமல் தடுக்க மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முகாமிலிருந்து, 500 மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் தமிழகத்தைச் சேர்ந்த ரங்கராகவன் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வடலூரை அடுத்த கோட்டக்கரையில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close