[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

கஞ்சா விற்பனை செய்த தந்தை மகன் உட்பட மூவர் கைது

three-persons-including-father-and-son-are-arrested-for-smuggling-cannabis

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பங்குன்றம் அருகே அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் உத்திரவின் பேரில் தனிப்படை மற்றும் அவனியாபுரம் காவல்துறையினர் இணைந்து அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அந்த வழியில் இருச்சக்கர வாகனத்தில் வந்த தெற்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் பாண்டி(35) என்பவரும் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள்(65),இவரது மகன் முத்தையா (25) ஆகிய மூவரையும் சோதனை மேற்கொண்டனர்.

Image result for kanja

இந்நிலையில் காவல்துறையினரிடம் இந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளனர். இதனையடுத்து அவனியாபுரம் போலீஸார் 3 நபர்களிடமும் தீவிர விசாரணையும், சோதனையும் மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து 4 கிலோ எடையளவு கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் 3 செல்போன்கள் மற்றும் இருச்சக்கர வாகனங்களை கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வெள்ளக்கல் பகுதியில் 4 கிலோ கஞ்சா பிடிப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : CannabisSmugglingகஞ்சாமதுரை
Advertisement:
Advertisement:
[X] Close