[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

திரைப்பட பாணியில் நடந்த ஆவடி கொலை: முக்கிய குற்றவாளி கைது

chennai-murder-case-culprit-was-arrested

ஆவடியில் பூக்கடை தொழிலாளியை  வெட்டிக் கொலை செய்து, வீட்டிலேயே புதைத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில்  முக்கியக் குற்றவாளி திவானை 7 மாதங்களுக்கு பின் தனிப்படை காவல்துறையினர் கடலூரில் கைது செய்துள்ளனர்.
  
ஆவடி ராமலிங்கபுரத்தை சேர்ந்த யசோதாவின்  மகன் சுந்தரம். இவர் ஆவடி மார்கெட்டில் பூக்கடையில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவருடைய தாயார் யசோதா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஆவடியில் பூ வியாபாரம் செய்யும் ராஜலட்சுமி என்பவரை விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த அமுதா என்ற பெண்ணுக்கும் சுந்தரத்திற்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. 

ராஜேஸ்வரி மூலமாக அமுதாவிற்கும் திவானுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ராஜேஷ்வரி, திவான் உள்ளிட்டோருடன் சுந்தரத்திற்கு தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ராஜேஷ்வரியை சுந்தரம் திட்டி வந்துள்ளார். இதனை பொருக்க முடியாத திவான் மற்றும் ராஜேஷ்வரி சுந்தரத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமுதா அழைத்ததாக கூறி சுந்தரத்தை, திவான் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

திவான் இல்லத்தில் அவரது கூட்டாளியாக கோபி மற்றும் சுந்தரம் இருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த திவானை இந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். சுந்தரத்தின் சடலத்தை திவானின் வீட்டில் குழித்தோண்டி புதைத்துவிட்டனர்.பின்னர் இரவோடு இரவாக அந்த இடத்தில் சிமெண்ட் போட்டு தரையை சுவடு தெரியாமல் மறைத்தனர்.

இந்தச் சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோ சங்கர் பாணியில் நடைபெற்ற இந்தக் கொலை பெரிதும் பேசப்பட்டது.இந்த வழக்கில்  திவானின் கூட்டாளிகள் ராஜேஷ்வரி, கோபி மற்றும் அமுதா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திவான் மட்டும் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தான். 

இந்த வழக்கு காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து கொலையாளி திவானை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் திவான் கடலூர் மாவட்டம், நாச்சியார்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் திவானை கைது செய்து ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து திவானிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கொலை நிகழ்ந்த வீட்டு அழைத்து சென்று விவரங்களை சேகரிக்கவுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close