JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
குற்றம் 04 Mar, 2017 01:44 PM

விசைத்தறிக் கூடங்களில் கொத்தடிமை குடும்பங்கள்..!

அடிமை முறை ஒழிக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மக்கள் சுதந்திரமாக பேசவும், எழுதவும், வாழவும் நம்முடைய தலைவர்கள் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்தும், இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கொத்தடிமை முறை, நவீன இந்தியாவில் இருப்பது அவமானச் சின்னமாக இருந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த அல்லி, இந்த வேதனையை அனுபவித்து வருகிறார். கண்ணீர் மல்க கதறி அழும் இந்தப் பெண்ணின் கணவர் கார்த்திக், முன் பணமாக வாங்கிய ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்காக கோவையில் உள்ள விசைத்தறிக் கூடம் ஒன்றில், கொத்தடிமையாக வேலை செய்து வருவதாகப் புகார் தெரிவிக்கிறார். அதிகப் பணிச்சுமையை அளிக்கும் அவர்கள், உடல்நிலை சரியில்லை என்றாலும் சிகிச்சைக்கு கூட அனுமதிப்பதில்லை என்றும், வதை முகாமில் இருப்பதைப் போல் உணர்வதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

தாங்கள் வாங்கிய முன் பணத்தை அடைப்பதற்காக, அல்லி - கார்த்திக் தம்பதியின் 13 வயது மகன் ராகுலின் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு கொத்தடிமை வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாகப் புகார் கூறுகின்றனர்.

பணிச்சுமையையும், மகனின் கல்வி பாதிக்கப்பட்டதையும் தாங்கிக் கொள்ள முடியாத கார்த்திக், மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கடந்த மாதம் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கோவையில் உள்ள பல விசைத்தறிக் கூடங்களில் இதேபோல் பலர் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கொத்தடிமை வேலை செய்ய நிர்பந்தித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள வேலுச்சாமி என்பவரை தொடர்பு கொண்ட போது, முன்பணமாகப் பெற்ற தொகையைத் திருப்பி கொடுக்க முடியாததால் இது போல் தேவையில்லாமல் பொய் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க, அரசு தொழிலாளர் நல சட்டங்களை சீரிய முறையில் அமல்படுத்துவதே நிரந்தரத் தீர்வு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads