[X] Close
JUST IN
குற்றம் 16 Oct, 2016 01:21 PM

சென்னையில் 1 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

1-kg-gold-seized-in-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்திவரப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில்,‌ மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்த உதவியதாக தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close