[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
குற்றம் 06 Oct, 2016 12:47 PM

காதல் விவகாரத்தால் நெல்லையில் நடந்த சாதி படுகொலை

father-woman-who-love-dalit-surrenders-killing-case

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன் கோவில் அருகிலுள்ள ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணப் பெருமாளின் மகள் கஸ்தூரி, செங்கோட்டையில் இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கலில் படித்துபோது, சிவகுருநாதன் என்பவரை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகுருநாதன் அடிக்கடி கஸ்தூரியின் ஊருக்கு வந்து அவரை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவகுருநாதன் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்ததால் கஸ்தூரி வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் கஸ்‌தூரியின் தந்தை லெட்சுமண பெருமாள், சிவகுருநாதனை தனியாக பேசலாம் என ஒரு கோயிலுக்கு வரவழைத்து அங்கு வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவகுருநாதன் சம்பவ இ‌டத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்த லெட்சுமண பெருமாள் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து தேவர் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.‌

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close