[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை திருட்டு

child-theft-in-dindigul-government-hospital

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை திருடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணுக்கு கடந்த 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தையை மாரியம்மாளின் தாய் சந்திராவின் பராமரிப்பில் இருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்து, சமயம் பார்த்து பிள்ளையை தூக்கி சென்றுள்ளார்.

திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து குழந்தையை திருடி சென்ற பெண் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close