[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - சிவமோக்காவில் டிச.1ல் படப்பிடிப்பு

vijay-sethupathi-to-meet-thalapathy-vijay-in-shivamogga

டிசம்பர் 1 முதல் ‘தளபதி64’ படத்தில் படப்பிடிப்பு கர்நாடகாவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பிகில்’ படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. ஒரு மாதக் காலம் டெல்லியிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வேலையை செய்து வருகிறது. இதன் அடுத்த கட்டமான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிவமோக்கா மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் விஜயுடன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் கலந்து கொள்ள உள்ளார். அவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. 

‘தளபதி64’ படத்தில் மாளவிகா மேனன் நாயகியாக நடித்து வருகிறார். இவர் சார்ந்த காட்சிகள் ஏற்கெனவே முக்கால்வாசி முடிவடைந்துவிட்டன. இவரது காட்சிகள் அனைத்தும் டெல்லியில் எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. மேலும் நடிகர் சாந்தனு கெளரி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான வேலைகளில் அவர் முழு மூச்சுடன் பாடல்களை இசையமைத்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை வரும் கோடையில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close