[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

பூஜையுடன் தொடங்கியது சிபிராஜின் ’கபடதாரி’

sibiraj-starrer-kabadadaari-shooting-starts-with-pooja-today

சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று காலை தொடங்கியது. நடிகர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.

சிபிராஜ், நந்திதா, பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் உட்பட பலர் நடிக்கும் படம், ’கபடதாரி’. சிபிராஜ் நடித்த ’சத்யா’, விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சைமன் கிங் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சிவகுமார் படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் இயக்குநர் சசி, நடிகர் சிபிராஜ், தயாரிப்பாளர்கள் தியா மூவிஸ் பி.பிரதீப், தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், ‘வால்டர்’ இயக்குநர் அன்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் கலந்து கொண்டனர்.  படத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close