[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

'பிகில்' டீசர் எப்போது? - படக்குழு தகவல்

vijay-s-bigil-teaser-leaked-online

பிகில் படத்தின் டீசர் இணையத்தில் வெளியானதாக பரவிய தகவல் உண்மையில்லை என படக்குழு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். நயன்தாரா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது.  பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டீசர் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பிகில் படத்தின் டீசர் என இணையத்தில் ஒரு வீடியோ வெளியானது. பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் ஏற்கெனவே வெளியான மற்ற சில படங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என சிலர் கருத்து தெரிவித்தனர். 

அதுமட்டுமின்றி, வசனங்களும் அவ்வாறே அந்த வீடியோவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, படக்குழு தரப்பில் விசாரித்த போது, இணையத்தில் வெளியான வீடியோவிற்கும், பிகில் டீசருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையிலான காட்சிகளுடன் டீசர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் ஒரு சில தினங்களில் பிகில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close