[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

"பிகில்" படத்தின் "உனக்காக" பாடல் ! இன்று மாலை ரிலீஸ்

unakaga-single-from-bigil-will-be-out-today

பிகில் படத்தின்  உனக்காக பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப்  உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

படத்தின் பாடல்கள் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு 'உனக்காக' பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏஆர்ரகுமான் இசையில் உருவான சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உனக்காக பாடலுக்காகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close