[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

டெல்லியில், விஜய்யின் ‘பிகில்’ இறுதிக் கட்டப்படப்பிடிப்பு

thalapathy-vijay-s-bigil-last-schedule-to-begin-in-delhi

விஜய்யின் ’பிகில்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடக்க இருக்கிறது. 

’தெறி’,‘மெர்சல்’ படங்களுக்குப் பின் இயக்குநர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக, நடிகர் விஜய் கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

 

சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் ’சிங்கப் பெண்ணே’ என்ற பாடல் இணையதளத்தில் லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் தனது முந்தைய படங்களான ‘சர்கார்’,‘மெர்சல்’ போல ‘பிகில்’ படத்திலும் அரசியல் வசனங்கள் பேசுவார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்தில் அரசியல் வசனங்கள் எதுவும் இடம்பெறாது என வசனகர்த்தா ரமணகிரி வாசன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் கடைசிக் கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் நடக்க இருக்கிறது. இதில், விஜய்யுடன் கால்பந்து வீராங்கனைகள் இந்துஜா, ரெப்பா மோனிகா, வர்ஷா, அம்ரிதா உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர். இதற்காக படக்குழு இந்த மாத இறுதியில் டெல்லி செல்கிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close