[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாகத் தொடங்கியது

91st-acadamy-awards

ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது.

91-வது ஆஸ்கர் விருதுக்கு, தி ஃபேவரைட் மற்றும் 'ரோமா' படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டன. 


இதில் ரோமாவுக்கு இதுவரை இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.

ஆஸ்கர் விருது விவரம்:

. சிறந்த துணை நடிகை:  Regina King (If Beale Street Could Talk படத்திற்காக) 
. சிறந்த மேக்கப் : வைஸ் (Vice)  
. சிறந்த ஆவணப்படம்: ஃப்ரீ சோலோ (Free Solo)
. சிறந்த ஆடை வடிவமைப்பு : ருத் இ கார்டர் (Ruth E Carter) பிளாக் பாந்தர் படத்துக்காக.

(ரெஜினா கிங்)


. தயாரிப்பு வடிவமைப்பு: ஹன்னா பீச்லர் மற்றும் ஜெய் ஹார்ட் -பிளாக் பாந்தர் படத்துக்காக.
. ஒளிப்பதிவு: அல்போன்சா குவாரன் -ரோமா படத்துக்காக
. துணை நடிகர்: மஹர்ஷாலா அலி -கிரீன் புக் படத்தில் நடித்ததற்காக
. ஒளிப்பதிவு: அல்போன்சா குரோன் (ரோமோ) 
. வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ )
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close