[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மறைந்த நடிகர் பி.யூ. சின்னப்பா மணிமண்டபத்திற்கு முதல்வர் ஒப்புதல் 

the-chief-minister-approved-the-construction-of-the-memorial-for-famous-actor-p-u-chinnappa

நாடக நடிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் மறைந்த நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்ட முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 86 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடக நடிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் மறைந்த நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் கட்ட முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

Image result for பி.யூ.சின்னப்பா

நாடக கலைஞர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், நடிகர்கள் சங்க தேர்தலில் யார் யார் எந்தெந்த பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதே புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கம்தான் என்றும் அந்த அளவிற்கு இந்தச் சங்கம் பழமையும் பாரம்பரியமும் வரலாறும் கொண்ட சங்கம் என்று கூறினார்.

Image result for பி.யூ.சின்னப்பா

புதுக்கோட்டையில் நலிந்த நாடக நடிகர்களுக்கு  ஆண்டு தோறும் பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. இனியும் அது தொடரும் என்றும் நாட்டுபுற கலைகளையும்,நாடக கலைஞர்களை காக்க இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் ஏற்கனவே புதுக்கோட்டையில் நலிந்த நாடக கலைஞர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாடக கலைஞர்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

Related image

மேலும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் மறைந்த மாபெரும் நடிகர் புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் கட்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பேசி அதற்காக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் விரைவில் புதுக்கோட்டையில் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close