[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு?

vijay-s-next-movie-expected-to-start-filming-in-end-of-january

விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி 63’.பெயரிப்படாத இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை இந்த இரு படங்களும் ஈட்டின.

‘தளபதி 63’ திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார்.

இந்நிலையில், ‘தளபதி 63’ படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதிர், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் படக்குழுவிடம் இருந்து படப்பிடிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close