[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்!

i-proposed-first-to-anisha-says-vishal

தன் வருங்கால மனைவியிடம், ’நான் தான் காதலை முதலில் சொன்னேன்’ என்று நடிகர் விஷால் தெரிவித்தார். 

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். அ வர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. நடிகை வரலட்சுமி இதை மறுத்திருந்தார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் வி ஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா ரெட்டியை விஷால் திருமணம் செய்துகொள்ள போவதாகச் செய்திகள் வெளியாகின. மே லும் விஷாலுடன் அனிஷா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் இணையத்தில் பரவின. இந்நிலையில் இதை நடிகர் விஷால் உறுதி செய் தார். அனிஷா, ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’அர் ஜூன் ரெட்டி’ மற்றும் ’பெல்லி சூப்புலு’ ஆகிய படங்களிலும் அவர் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் காதலில் விழுந்தது எப்படி என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

’’விசாகப்பட்டினத்தில் ’அயோக்யா’ பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது ஒரு டீம் என்னை சந்தித்தது. பெண்கள் இணைந்து ’மைக்கேல்’ என் ற ஆங்கிலம் படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாகச் சொன்னார்கள். அதில் அனிஷா ஹீரோயினாக நடிக்கிறார். அபூர்வா இயக்குகிறார். இந்தப் படத்தில் பணியாற்றும் டெக்னீயஷன்கள் அனைவரும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். படத்தின் கதையும் விவசாயம் பற்றியது தான். அவர்கள் ஐடியா பிடித்திருந்தது. 

அதனால், இந்தப் படத்தை நான் வழங்குவதாகச் சொன்னேன். அப்போது அறிமுகமானார் அனிஷா. பார்த்ததுமே பிடித்துப் போனது. அவரை கட வுள் அனுப்பியதாக நினைத்துக் கொண்டேன். பிறகு நட்பானோம். நான்தான் காதலைச் சொன்னேன். அவர் உடனே பதில் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து ஓகே சொன்னார். எனக்கு மகிழ்ச்சி. அனிஷா, தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையிலும் ஈடுபட்டு வ ருகிறார். திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று அவரை கட்டாயப்படுத்த மாட்டேன்.

அது அனிஷாவின் விருப்பம். சமீபத்தில் அவரது வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு புலியை தூங்க செய்வதற்கான பயிற்சியளித்தார். அது தொடர்பான நடத்தை பயிற்சியை அவர் கற்றிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது.  மார்ச் மாதம் எங்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் திருமணம் நடக்கும். அதுவரை காத்திருப்பதாக அனிஷா தெரிவித்தி ருக்கிறார்’’ என்றார் விஷால்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close