[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு!

fan-commits-suicide-by-setting-himself-on-fire-outside-yash-s-house

பிரபல கன்னட ஹீரோ யஷ் வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபல கன்னட ஹீரோ யஷ். கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ், இந்தி, கன்னடத்தில் வெளியான ’கே.ஜி.எஃப்’ என்ற படத்தில் இவர் நடித்திருந் தார். இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது. இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோத னை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணமும் நகைகளும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

நடிகர் யஷ்சுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளன்று அவர் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த வருடம் அவர் பிறந்தநாளை கொண்டாடவில்லை. ரசிகர்களையும் சந்திக்கவில்லை. 

இந்நிலையில் யஷ்-சின் ரசிகரான ரவி (28) என்ற கூலி தொழிலாளி, பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, அவர் வீட்டுக்குச் சென்றார். யஷ், வீட்டில் இல்லை. இதனால் அவரை பார்க்க முடியவில்லை என்பதாலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முடியாததாலும் ரவி, மனம் உடைந்தார்.

இதையடுத்து அவர் வீட்டின் முன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். யஷ் வீட்டு முன்பு பாது காப்பு பணியில் இருந்த போலீஸ்காரர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

(ரவி)

மருத்துவமனை சென்ற நடிகர் யஷ், ரவியின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close