[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“நீங்கள்தான் என் ஆசான், நண்பன்” - ரஹ்மானுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து 

ar-rahman-gets-a-special-wish-from-his-son

தனது தந்தை ரஹ்மானின் பிறந்தநாளுக்கு அவரது மகன் உணர்வுப்பூர்வமாக ஒரு வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரஹ்மானுக்கு சிறப்பான ஆண்டு. அவரது அன்பான இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘செக்கச்சிவந்த வானம்’ போன வருடம்தான் திரைக்கு வந்தது. அதில் ரஹ்மானில் இசை பல தரப்பினரையும் கவர்ந்து ஈர்த்தது. அதேபோல மெகா பட்ஜெட்டில் வெளியான ரஜினியின் ‘2.0’ படமும் வெளியானது போன வருடம்தான். இந்தப் படத்திற்கும் ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதை மீறி கடந்த வருடம் இவர் இசையமைத்த ‘சர்கார்’ ப்ளாக்பாஸ்டர் ஹிட் ஆனது. ஆக, இந்த இரு படங்களும் பாக்ஸ் ஆபீசின் வசூலை தொட்டன. 

‘மெட்ராஸ் மொசார்ட்’என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஹ்மானுக்கு நேற்றுதான் பிறந்தநாள். ஜனவரி 6 அன்று இவரது பிறந்த நாளை மிகச் சிறப்பாக சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆஸ்கர் நாயகனான இவரை உலகம் முழுக்க உள்ள பலர் வாழ்த்தி தள்ளினர். இப்படி பலவிதமான வாழ்த்துகளின் நடுவே அவருக்கு ஒரு ஸ்பெஷலான வாழ்த்தும் வந்து சேர்ந்துள்ளது. 

யார் அந்த ஸ்பெஷலான நபர்? அவரது மகன் அமீன்தான். தனது தந்தைக்கு ட்விட்டரில் மிகச் சிறப்பான வாழ்த்தை தட்டி விட்டுள்ளார் அமீன். அந்தப் பதிவில், “அன்புள்ள அப்பா..இன்று உங்களின் பிறந்தநாள். நீங்கள்தான் என் ஆசான், நண்பன், உத்வேகம் மற்றும் எல்லாம் என்பது உங்களுக்கே தெரியும்” என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ரஹ்மான் இசையமைத்த ‘சர்வம் தாள மயம்’ விரைவில் வெளிவர உள்ளது. இதில் இவரது சகோதரியின் மகன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இப்படம் வெளியாகவிருந்த நிலையில், பிப்ரவரி 1 அன்று வெளியாகும் என மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close