[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

'பேட்ட' டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள்

rajini-starrer-petta-film-trailer-is-all-set-to-relase-tomorrow

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  ‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த மாதம் 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். இதனையடுத்து படத்தின் டீஸர் ரஜினி பிறந்தநாளில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ‘பேட்ட’படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதில் பேசிய ரஜினி, ”விஜய் சேதுபதியை பார்த்திருக்கேன். நல்ல நடிகன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் பழகிய பிறகுதான் தெரிந்தது அவர் மகா நடிகன். அதேபோல் நல்ல மனிதன். நீண்ட நாள் கழித்து நல்ல நடிகனோடு நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. திரிஷாவுக்கு மிகச்சிறிய கதாப்பாத்திரம் தான். அவர்கள் எப்படி இதில் நடிப்பார்கள் என்று கேட்டேன். ஆனால் அவர் இதை மிகவும் விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார்கள். இன்னமும் இளமையாகவே திரிஷா காட்சியளிக்கிறார். அதற்கு யோகா செய்வதே காரணம் என தெரிவித்தார்.” என அனைத்து நடிகர் நடிகைகளை பற்றியும் பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close