[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’

director-susienthiran-s-kenney-club-speaks-chinese-now

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து வரவேற்பு கிடைக்கும். அமீர்கானின் 'டங்கல்' மற்றும் பிரபாஸின் 'பாகுபலி' போன்ற இந்திய திரைப்படங்கள் சீன சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோன்று சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள ‘கென்னடி கிளப்’ படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது போன்ற கதைக்களத்தை உள்ளடக்கிய படங்கள் சகல தரப்பினரையும் ஈர்க்கும். அப்படிதான் சீனாவில் பெரியத் தொகைக்கு சுசீந்திரன் படம் விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்வில் பெண்களுக்கு கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

'கென்னடி க்ளப்' படத்தில் சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close