[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்!

actor-duniya-vijay-in-trouble-after-wives-lock-horns

தனது இரண்டாவது மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவான முதல் மனைவியால், கன்னட ஹீரோ ’துனியா’ விஜய் அப்செட் ஆகியுள்ளார்.

பிரபல கன்னட ஹீரோ ’துனியா’ விஜய். இவரது முதல் மனைவி நாகரத்னா. இவர்களுக்கு  2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல மாடலும் சாப்ட்வேர் என்ஜினீயருமான கீர்த்தி கவுடாவை, விஜய் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் விஜய் வசித்து வருகிறார். முதல் மனைவி நாகரத்னா தனது குழந்தைகளுடன் தனியாக  வசித்து வருகிறார். 


 
கடந்த மாதம் உடற்பயிற்சியாளர் மாருதி கவுடாவை கடத்தி தாக்கியதாக போலீசார், விஜயை கைது செய்தனர். இதற்கு கீர்த்திதான் காரணம் எனக்கூறி கடந்த மாதம் 24-ஆம் தேதி விஜய்யின் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, கீர்த்தியை சரமாரியாகத் தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார்.

இதுதொடர்பாக நாகரத்னா மீது கீர்த்தி போலீசில் புகார் செய்தார். இதேபோல கீர்த்தி மீதும்  நாகரத்னா புகார் செய்தார். இந்நிலையில், கீர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து நாகரத்னா, தாக்கும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவின் அடிப்படையில் நாகரத்னாவிடம் விசாரணை நடத்த போலீசார், வீட்டுக்கு சென்றனர். அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் மகள்கள் மோனிஷா, மோனிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையறிந்த நடிகர் விஜய், தனது 2-வது மனைவியுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். 

‘நாகரத்னாவின் தவறுக்காக என் மகள்கள் பாதிக்கப்படக்கூடாது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்று கொண்ட போலீசார், நாகரத்னாவை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் நடிகர் விஜய் கவலை அடைந்துள்ளதாக கன்னட சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close