[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

சிட்டியை காண ரெடியா ? ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்

shankar-released-new-poster-of-rajinikanth-starring-2-0

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் வரும் 13 ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதில் ரஜினி நடித்துள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை  லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

Read Also -> நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை லைகா நிறுவனம் முன் வந்து விளக்கம் அளித்திருந்தது. ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததை போலவே வரும் 13ம் தேதி டீசர் வெளியிடப்பட உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

Read Also -> ’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்? மலரும் நினைவுகளில் பாரதிராஜா! 

3டியில் டீஸரா அப்போது திரையரங்குகளில்தான் டீசரை காண முடியுமா என பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு லைகா நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தது "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. எந்தெந்த திரையரங்குகளில் டீசர் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், 3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடியூபிலும், 2D தொழில்நுட்பத்திலும் டீசர் வெளியாகும்" என தெரிவிக்கப்பட்டது. 

Read Also -> நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை!  

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சிட்டியை காண தயாராகுங்கள்" என ட்வீட் செய்து இரண்டு ரஜினிகள் இருக்கும் புதியபோஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் எந்திரன் முதல் பாகத்தில் கலக்கிய சிட்டி ரோபாவின் கதாப்பாத்திரமும் இருக்கிறது, விஞ்ஞானியாக வரும் வசீகரன் கதாப்பாத்திரமும் இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள இந்தப் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close