[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

actor-vellai-subbaiah-passes-away

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சுப்பையா. சினிமா ஆர்வம் காரணமாக சென்னை வந்த அவர் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் பல  முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அவர் நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் பலர் இருந்ததால் தனது பெயருடன் ’வெள்ளை’யை சேர்த்துக்கொண்டார். ’வைதேகி காத்திருந்தாள்’, ’கரகாட்டக்காரன்’ உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி' என்ற பாடலில் தனியாக ஆடி பாடி நடித்தவர் இவர். வடிவேலுவுடன் இவர் நடித்த, ‘திரும்ப திரும்ப பேசற நீ...’ காமெடி காட்சி புகழ்பெற்ற ஒன்று. கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல் லாமல் 3 தலைமுறை நடிகர்களோடு நடித்த இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார்.

சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்ட அவர் அதற்காக கலெக்டரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன் மனு கொடுத்ததாக செய்திகள் வெளி யாயின. இந்நிலையில்  நேற்று இரவு அவர் காலமானார். இறுதி  சடங்கு இன்று நடக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.

மறைந்த வெள்ளை சுப்பையாவின் மனைவி, சாவித்திரி. இவர்களது ஒரே மகள் தனலட்சுமி.  திருமணத்துக்குப் பின் குடும்பத்துடன் குவைத்தில் வசித்துவருகிறார்.

 

Read Also -> அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? புதிய தோற்றத்தில் சோனாலி பிந்த்ரே

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close