[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா?

sania-mirza-to-play-herself

’பயோபிக்’ சீசன் இது! சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை சினிமா ஆக்குவதில் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வெளியான சில பயோபிக் படங்கள் வசூலை வாரி குவித்துள்ளதால் இந்த போக்கு இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 

சச்சின் வாழ்க்கை வரலாறு, தோனியின் வாழ்க்கை வரலாறு, சமீபத்தில் வெளியான சஞ்சய் தத்தின் வாழ்க்கைக் கதையான சஞ்சு, முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையான ’நடிகையர் திலகம்’ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இதனால் மாநில மொழிகளிலும் இதுபோன்ற படங்களை உருவாக்க தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

குத்துச்சண்டை வீராங்கானை ’மேரி கோம்’ வாழ்க்கை அவர் பெயரிலேயே சினிமாவானது. இதில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அடுத்து பேட்மின்டன் வீராங்கானை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையில் ஹர்ஷ்வர்தன் கபூர் நடித்துவருகிறார்.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் டாப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது. மற்றொரு பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது. இதை பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதில் தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதே போல இன்னும் சில விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

அந்த வரிசையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. பல்வேறு சினிமா நிறுவனங் கள் அவர் வாழ்க்கை கதையை படமாக்க அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில், ரோனி ஸ்குருவாலாவின் ஆர்எஸ்விபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு சானியா ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் உரிமைக்காக சானியாவுக்குப் பெரும் தொகைக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதில் அவரையே சானியாவாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிப்பதற்கு சானியா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close