[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்

பவன் கல்யாண் பட ரீமேக்கில் நடிப்பது யார்?

which-hero-will-do-attarintiki-daredi-remake-in-tamil

பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா, நந்தியா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம், ’அத்தரிண்டிகி தரேடி’. 2013-ல் வெளியான இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கி இருந்தார். 

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்போது பெற்றுள்ளது.  குடும்ப கதையை கொண்ட இந்தப் படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்களிடம் அந்நிறுவனம் பேசி வருகிறது. 

கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான ’கடைக்குட்டி சிங்கம்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் குடும்ப கதைகளில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் நடித்தால் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் இணையதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அஜீத்துக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close