[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ஜி.வி.பிரகாஷ்குமாரை இயக்குகிறார் வசந்தபாலன்!

vasantha-balan-has-roped-in-g-v-prakashkumar

’வெயில்’ படம் மூலம் ஜி.வி.பிரகாஷ்குமாரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன். இந்தப் படம் ஹிட். படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து, அவர்கள் இணைந்து ’அங்காடி தெரு’ வில் பணியாற்றினர். அப்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், அந்தப் படத்தின் ஒரு பாடலையும் பின்னணி இசையையும் விஜய் ஆண்டனி அமைத்தார்.

அடுத்து ’அரவான்’ படத்தில் பின்னணி பாடகர் கார்த்திக்கை இசை அமைப்பாளர் ஆக்கினார் வசந்தபாலன். இதற்கிடையே ’டார்லிங்’ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார், அதற்குள் ஏழு படங்களில் நடித்து முடித்துவிட்டார். கையில் இன்னும் 10 படங்களை வைத்திருக்கிறார். 

இந்நிலையில் ’காவிய தலைவன்’ படத்துக்கு பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார் வசந்தபாலன். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

இதுபற்றி வசந்தபாலனிடம் கேட்டபோது, ‘எனது கடந்த படம், பீரியட் படமாக அமைந்தது. இது சீரியஸ் படம். சென்னையில் நடக்கும் கதை. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்துவருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close