[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை!

producer-bandla-ganesh-gets-shock-from-court

பிரபல முன்னணி தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் பண்ட்லா கணேஷ். இவர் நடிகரும் கூட. தனது பரமேஸ்வரா ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, நயன் தாரா, ரவிதேஜா நடித்த ஆஞ்சநேயலு, பவன்கல்யாண் நடித்த தீன் மார், கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பாஷா, டெம்பர் உட்பட சில மெகா பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார். 

’டெம்பர்’ படத்தில் வக்காந்தம் வம்சி என்ற கதாசிரியர் பணியாற்றினார். அவருக்கு பேசப்பட்ட ரூ.26 லட்சம் சம்பளத்தில் குறைந்த அளவே கொடுத்துள்ளார் கணேஷ். பாக்கி பணத்துக்காக கொடுக்கப்பட்ட காசோலை, வங்கியில் பணமில்லை என்று திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து எர்ராமன்சிலில் உள்ள சிறப்பு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் வாசு. வழக்கை விசாரித்த நீதிமன்றம், காசோலை மோசடிக்காக பண்ட்லா கணேஷூக்கு 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.15 லட்சத்து 86 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close