[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

புதிய யுக்தியுடன் வெளிவந்த தரமணி 3வது ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு!

tharamamani-3rd-trailer-receives-a-welcome-reception

'தரமணி' படத்தின் மூன்றாவது டீசரை அப்படத்தின் இயக்குநர் ராம் புதிய யுக்தியுடன் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை கவந்துள்ளது. 

'தரமணி' படத்தின் மூன்றாவது டீசர் நேற்று வெளியானது. ஆண்ட்ரியா, வசந்த் நடிப்பில் உருவான இந்தப் படத்திற்கு 'ஏ' சான்றிதழை இயக்குநர் கேட்டுப் பெற்றுள்ள நிலையில், புதிய டீசரில் சென்சார் போர்டு அனுமதித்த வசனங்கள் மியூட் செய்யப்பட்டும், தடை விதிக்கப்பட்ட  வசனங்களை அனுமதித்தும் வெளியிட்டிருக்கிறார்கள்‌. 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் ஐந்து ஆண்கள் கொண்ட ஒரு கும்பல் தனியாக வரும் ஆண்ட்ரியாவை கேலி செய்வதாகவும் அதனால் கோபப்படும் ஆண்ட்ரியா அந்தக் கும்பலை செருப்பால் அடித்து திட்டுவதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

படத்தில் அந்தக் கும்பல் ஆண்ட்ரியாவை வக்கிரமாக கேலி செய்யும் வசனங்களுக்கு சென்சார் அனுமதி அளித்திருந்தது. ஆண்ட்ரியா அவர்களை திட்டும் ஓருரி வார்த்தைகளுக்கு சென்சார் தடை செய்திருந்தது. ஆனால், இந்த ட்ரெய்லரில் சென்சார்ஃபோர்டு அனுமதித்த அந்தக் கும்பல் திட்டும் வசனங்களை மியூட் செய்தும், அனுமதிக்கப்படாத ஆண்ட்ரியா பேசும் வசனங்கள் கேட்கும் வகையிலும் வெளியிட்டுள்ளனர். 

இந்த வித்தியாசமான ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அத்துடன் அனைத்துப்பட ட்ரெய்லர்களின் முடிவிலும் படத்தின் டைட்டில் இடம்பெறும். ஆனால், இந்த ட்ரெய்லர் ஏ என்கிற எழுத்துடன் முடிகிறது. சென்சார்ஃபோர்டு வழங்கிய ஏ சான்றிதழை வைத்தே இப்படத்தில் ப்ரமோசன்களை வித்தியாசமாக செய்துவருகின்றனர் படக்குழுவினர்.  தரமணி படம் ஆகஸ்டு 11-ம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close