[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
சினிமா 28 Jul, 2017 07:07 PM

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

vijay-sethupathi-in-mani-ratnam-direction

சமீபகாலமாக கோலிவுட்டில் அதிக வெற்றிகளை குவித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்துவரும் விஜய் சேதுபதிக்கு தனது இயக்கத்தில் நடிக்க மணிரத்னம் அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக விஜய் சேதுபதியுடன் இதுவரை ஐந்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். பல படங்களில் நடித்துவரும் விஜய்சேதுபதி 12 மாதங்கள் வரை கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை. இருப்பினும் மணிரத்னம் படத்தில் நடிக்க இசைவு தெரிவித்துள்ளதால் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும்படி இயக்குநர்களிடமும், படத்தயாரிப்பு நிறுவனங்களிடமும் கேட்டு வருகிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 

சில ஆண்டுகளாக மணிரத்னம் இயக்கிய படங்கள் தோல்வியைத் தழுவின. ஓகே காதல் கண்மணி படம் மட்டுமே வெற்றி பெற்றது. அவர் கடையாக இயக்கிய காற்று வெளியிடை  தோல்வியைத் தழுவியது. விஜய் சேதுபதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியைக் குவித்துள்ளன. தற்போது சமீபகாலமாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த 8 படங்களில் 7 படங்கள் வெற்றியைக் குவித்துள்ளன. கடந்த வாரம் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மணிரத்னத்துடன் விஜய்சேதுபதி கைகோர்க்க இருக்கிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close