[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ரஜினியின் 2.0 - ஹாலிவுட்டில் பறக்கும் ராட்ஷச பலூன்கள்

rajinikanth-s-2-0-100-foot-tall-hot-air-balloon-all-set-to-travel-the-world

உலகளவில் விளம்பரப்படுத்துவதற்கும், கவனம் ஈர்க்கும் நோக்கத்துடனும் ரஜினி, அக்ஷய் குமாரின் புகைப்படங்களைக் கொண்ட "2.0" படத்தின் ராட்ஷச பலூன்கள் அமெரிக்காவின் ஹாலிவுட் பார்க்கில் பறக்கின்றன. பறக்கும் ராட்ஷச பலூன்களின் படங்கள் தற்போது 2.0 படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படத்தை ரூ. 400 கோடி செலவில் லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. 2.0 படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - எமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 2.0 திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

2.0 திரைப்படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ராஜூ மகாலிங்கம் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் என்று அழைக்கப்படும் திரையுலகப் பகுதியில் ரஜினி, அக்ஷய் குமார் புகைப்படங்களைக் கொண்ட ராட்சத 100 அடி பலூன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

எட்டு மாதங்களாக தயாரிக்கப்பட்ட இந்த ராட்ஷச பலூன்கள், 2.0 படத்தின் முதல் ப்ரொமோஷன் யுக்தியாக பார்க்கப்படுகிறது. இந்த ராட்சத பலூன்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. லண்டன், துபாய், சான் பிரான்சிஸ்கோ, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என இந்த 2.0 விளம்பர ராட்ஷச பலூன்கள் வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.0 படத்தை நாங்கள் இந்தியப் படமாக மட்டும் எண்ணவில்லை. ஹாலிவுட் படமாகக் கருதி விளம்பரம் செய்யத் தயாராகியுள்ளோம் என்கிறார் ராஜூ மகாலிங்கம். 
இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் இதுபோன்ற பிரமாண்டமான விளம்பர யுக்திகள் செயல்படுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close