[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக்: இன்று மாலை வெளியாகிறது

viswaroopan-first-look-releasing-today

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உட்பட பலர் நடித்த படம், விஸ்வரூபம். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருந்த இந்தப் படம் 2013ல் வெளியாகி ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. இதன் விநியோக உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார். 2014ம் வருடமே இந்தப் படம் வெளியாகி இருக்க வேண்டும். சில காரணங்களால் அவரால் படத்தை வெளியிட முடியவில்லை. இதையடுத்து அந்தப் படத்தை கமல்ஹாசனே இப்போது வெளியிட இருக்கிறார். இதை சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close