[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தொழுகை குறித்த டிவிட்டர் பதிவால் சர்ச்சை... மொட்டை அடித்த சோனு

sonu-nigam-shaves-off-his-head-for-tweet-issues

இஸ்லாமியர்களின் அதிகாலை தொழுகை தூக்கத்தை கெடுப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பாடகர் சோனு நிகம் செய்தியாளர் சந்திப்பின் போதே மொட்டை அடித்தார்.

பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகம், இஸ்லாமியர்களின் அதிகாலை தொழுகை ஒலிபெருக்கியில் ஒலிப்பது, தூக்கத்தை கெடுப்பதாகவும், இது ஒரு கட்டாய மதத் திணிப்பு எனவும் டிவிட்டரில் பதிவிட்டார். இதற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்கள் வெளியான நிலையில், சோனு நிகத்தின் தலைக்கு மொட்டை அடிப்பவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பேன் என கொல்கத்தாவை சேர்ந்த மதகு‌ரு ஒருவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சோனு நிகம் மொட்டை அடித்து கொண்டதோடு, தான் எழுப்பியது சமூக பிரச்னையே என்றும் அதனை மதத்தோடு தொடர்பு படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close