[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

எளிதில் கோபப்படுவேன்.. அரசியலுக்கு பொருத்தமானவன் அல்ல... கமல்ஹாசன்

i-am-not-suitable-for-politics-say-kamal-hassan

தான் எளிதில் கோபப்படும் சுபாவம் உள்ளவர் என்பதால் அரசியலுக்கு பொருத்தமானவன் அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற போதிலும் அந்த முடிவு தான் ஏற்கும்படி இல்லை என அவர் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பலரின் கருத்தும் இதுவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.

சசிகலா குற்றவாளி என்பதை உச்ச நீதிமன்றமே தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட கமல் இதில் மறைந்த ஜெயலலிதாவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளின் மன்றமான சட்டமன்றம் கறை படியாததாக இருக்க வேண்டும் என்றும் எனவே மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கமல் கூறியுள்ளார். தான் எளிதில் கோபப்படும் சுபாவம் உள்ளவர் என்பதால் அரசியலுக்கு பொருத்தமானவன் அல்ல என்றும் கமல் தன் பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close