[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

2016 தமிழ் சினிமாவின் இறைவிகள்

tamil-cinema-iraivigal

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கான களம் பெரும்பாலும் கவர்ச்சி.. காதல் பண்டம் எனும் ஜிகினாத்தன்மையுடன்தான் இருக்கிறது.

அவ்வப்போது பெண்களும் மனிதர்கள் என்று நினைவு படுத்தும் கதாபாத்திரங்களிலும் அவர்கள் வந்து சென்றிருக்கின்றனர்.

2016ல் நாயகிகள் தங்களை வெளிப்படுத்திய விதமும் சரி, கதாநாயகிகள் குறித்தான ரசிகர்களின் பார்வையும் சரி சிறிது மாறியிருந்தது. முன்னணி கதாநாயகிகள் முதல் இளம் நாயகிகள் வரை தங்களுக்கான பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததாகட்டும், ரசிகர்கள் அதனை வரவேற்ற விதமாகட்டும் வழக்கத்தை விட 2016 சற்று மாறியே இருந்தது.

2016ல் வெளியான இறுதிசுற்று, இறைவி, கபாலி என பல படங்களில் நாயகிகளின் பங்கு அளப்பறியதாக அமைந்திருந்தது. கபாலி ராதிகா ஆப்தே, இறுதிசுற்று ரித்திகா சிங் முதற்கொண்டு கககபோ மடோனா சபாஸ்டியன், இரு முகன் நயன்தாரா வரை இந்தாண்டு நாயகிகள் தங்களுடைய கதாபாத்திரம் குறித்து அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவியில் இதுவரை தமிழ்ப்படங்கள் பேசாத, பெண்கள் குறித்தான பல விஷயங்கள் பேசப்பட்டன. இதில் நடித்த அஞ்சலி, பூஜா தேவரியா, கமாலினி முகர்ஜி என மூன்று நாயகிகளும் தங்களுடைய பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனம் என அனைத்தும் பெண்களிடம் மட்டுமில்லாமல் ஆண்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் மத்தியில் தாரை தப்பட்டை பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் வரலட்சுமி சரத்குமார் கரகாட்டக்காரி கேரக்டரில் தன்னுடைய முழு திறமையையும் வெளிபடுத்தியிருப்பார். அடுத்து சமந்தா.......விஜய், சூர்யா போன்ற பெரிய ஹீரோக்கள் படங்களில் வழக்கமாக கதாநாயகிகளுக்கான ஸ்பேஸ் பெரிய அளவில் இருக்காது. ஆனா தெறி, 24 ஆகிய இரண்டு படங்களிலும் சமந்தா தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்தார்.

பெண் இயக்குனர் இயக்கிய படம் என்பதாலோ என்னவோ இறுதிசுற்று படம் தமிழ் சினிமாவில் நாயகிகள் இடத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது. கதைக்கு ஏற்றபடி நிஜமான பாக்சரான ரித்திகா சிங்கையே கதாநாயகியாக அறிமுகம் செய்திருந்தார் இறுதிசுற்று இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத். ரித்திகா சிங் தமிழ் சினிமாவிற்கு 2016ன் ஸ்பெஷல் எண்ட்ரி என்றே கூறலாம். வழக்கமாக பெண்களுக்கான படம் என்றாலே புரட்சி வெடிக்க வசனம் பேசுவதாக இருக்கும். ஆனால் இறுதிசுற்று, இறைவி, கபாலி போன்ற படங்களில் கதைக்கு ஏற்றாற் போல நாயகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடைய முழு திறமையையும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும், போற்றும் எதார்த்த சினிமா என்பது பெண்களுடைய பாத்திரத்தையும் சிறப்பாக அமைத்தால் ஒழிய கைகூடுவதில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் சினிமா இறைவிகளால் சிறப்பு பெற்றதை யாராலும் மறுக்க முடியாது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close