[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

மீண்டும் கலக்க வரும் 'தெறி' கூட்டணி..!

again-vijay-and-atlee-hand-joins

தெறி வெற்றிக்குப் பின் இயக்குனர் அட்லி- விஜய் கூட்டணி மீண்டும் கரம்கோர்க்க உள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் இணைந்து இந்தாண்டு தியேட்டர்களைக் கலக்கிய திரைப்படம் தெறி. பாடல், வசூல் என அனைத்திலும் தெறி உச்சம் தொட்டது. இளைய தளபதிக்கு 2016-ல் தெறி மட்டுமே ரீலிஸ் ஆன போதிலும் ரசிகர்களுக்கு தேவையான விருந்தை கச்சிதமாக கொடுத்திருந்தார் அட்லி. மகா இயக்குனர் மகேந்திரன் வித்தியாசமான நடிப்பில் வியக்க வைத்திருந்தார்.

இந்நிலையில் தெறி இயக்குனர் அட்லியுடன் தனது 61-ஆவது படத்தில் மீண்டும் இளையதளபதி கைகோர்க்க உள்ளார் என்ற செய்தி உறுதியாகி உள்ளது. விஜய்-யும் அட்லியும் இணைந்த முதல் படம் தான் தெறி. ஆனால் முதல் படத்திலேயே விஜய்-யின் மனதை தொட்ட இயக்குனராக மாறிவிட்டதாலேயே மீண்டும் இருவரும் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

தெறி நாயகியான சமந்தாவே இந்தப்படத்திலும் விஜய்-க்கு ஜோடியாக வருவார் எனவும் தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் சமந்தாவின் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், இளைய தளபதியுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு ‘விரைவில்’ என சமந்தா பதிலளித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close